வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் இந்தியர்கள் போராட்டம் நடத்தியதுடன், பேரணி நடத்தினர்.
பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி., நிறுவனம், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தியுள்ளனர். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பிபிசிக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணி நடத்தியதுடன், பிபிசிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

பிபிசி போலி ஒளிபரப்பு நிறுவனம், பிரதமர் மோடிக்கு எதிராக தயாரிக்கப்பட்ட பொய் மற்றும் ஒரு தலைபட்சமான ஆவணப்படத்தை இந்தியர்கள் நிராகரிக்கின்றனர் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியின் போது அவர்கள் ஏந்தி வந்தனர்.