புதுடில்லி: இந்தியா அளவில் மற்றும் சொந்த மாநிலத்தில் பிரபலமான முதல்வர்கள் குறித்த பட்டியலை ஆங்கில டிவி சேனல் வெளியிட்டு உள்ளது. அதில், முதல்வர் ஸ்டாலினுக்கு, இந்திய அளவில் 4வது இடமும்,சொந்த மாநிலத்தில் 8 வது இடமும் கிடைத்துள்ளது.
பிரபல ஆங்கில டிவி சேனலான ' இந்தியா டுடேவும்' சி வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து 'மூட் ஆப் தி நேஷன் ' என்ற கருத்துக்கணிப்பை நாடு முழுவதும் நடத்தியது. அதில் இந்திய அளவிலும், மாநிலங்களிலும் சிறந்த முதல்வர்கள் குறித்தும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி இந்திய அளவிலான சிறந்த முதல்வர்கள் பட்டியல்
முதலிடம் - உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்(39.1 % பேர் ஆதரவு)
2வது இடம்- டில்லி முதல்வர் கெஜ்ரிவால் (16 % பேர் ஆதரவு)
3வது இடம் - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (7.3 % பேர் ஆதரவு)
4வது இடம்- தமிழக முதல்வர் ஸ்டாலின்(4.6 % பேர் ஆதரவு)
5வது இடம்- ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்(3.4 % பேர் ஆதரவு)
6வது இடம் - அசாம் முதல்வர் ஹிமாண்டா பிஸ்வா சர்மா(2.5 % பேர் ஆதரவு)
7வது இடம் - ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்(2.4 % பேர் ஆதரவு)
8 வது இடம் - மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே(2.2 % பேர் ஆதரவு)
9வது இடம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி(1.6 % பேர் ஆதரவு)
10வது இடம்- சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல்(1.4 % பேர் ஆதரவு)

சொந்த மாநிலங்களில் சிறந்த முதல்வர்கள் பட்டியல்
முதலிடம் - ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்(73.2 % பேர் ஆதரவு)
2வது இடம்- டில்லி முதல்வர் கெஜ்ரிவால் (69.2 % பேர் ஆதரவு)
3வது இடம் - அசாம் முதல்வர் ஹிமாண்டா பிஸ்வா சர்மா (68.3 % பேர் ஆதரவு)
4வது இடம்- சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் (55.7 % பேர் ஆதரவு)
5வது இடம்- ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் (54.7 % பேர் ஆதரவு)
6வது இடம் - உத்தரகண்ட் முதல்வர் புஷ்கார் சிங் தாமி (53.4 % பேர் ஆதரவு)
7வது இடம் - உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் (48.6 % பேர் ஆதரவு)
8 வது இடம் - தமிழக முதல்வர் ஸ்டாலின் (45.7 % பேர் ஆதரவு)
9வது இடம் - குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்(43.6 % பேர் ஆதரவு)
10வது இடம்- ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி (1.4 % பேர் ஆதரவு)