இந்தியாவில் 2023ம் ஆண்டுக்குள் 100க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக லம்போர்கினி இந்தியா தலைமை நிர்வாகி சரத் அகர்வால்
தெரிவித்துள்ளார்.
இத்தாலியை சேர்ந்த ஆடம்பர சொகுசு கார்கள் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி உலகளவில் மிகவும் பிரபலமானது. தற்போது ஆசிய பசுபிக் மற்றும் இந்திய சந்தையில் கால்பதிக்க தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் லம்போர்கினி கார் மாடல்கள் ரூ.3.8 கோடியில் இருந்து துவங்குகிறது.
![]()
|
லம்போர்கினி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சரத் அகர்வால் கூறுகையில்,
இது சில நாட்களாக வந்து கொண்டிருக்கும் கேள்வி. 2023 ல் நாம் எப்படி 3 இலக்கத்தை அடைந்து சதத்தை அடிப்பது என்று ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியாவை பொறுத்தவரை, எங்கள் விற்பனையில் மந்தநிலையை காணவில்லை. உண்மையில், நாங்கள் அதிக ஆர்டர்களுடன் புதிய ஆண்டை தொடங்கியுள்ளோம்.
![]()
|
மேலும் எங்களுடைய அனைத்து மாடல்களும், சராசரியாக 18 மாதங்கள் காத்திருக்கும் நேரத்தைக் கொண்டுள்ளன. எனவே நடப்பு ஆண்டுக்கான உற்பத்தி ஒதுக்கீடு ஏற்கனவே முடிந்துவிட்டது என்பதை தெளிவாக காட்டுகிறது. எங்களுடைய வளர்ச்சி நேர்மறையாக உள்ளது.
நடப்பாண்டு முதல் பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்க கூடிய, ஹைபிரிட் கார்களுக்கான அடுத்த கட்டத்திற்கான பயணத்தை துவங்க உள்ளோம். 2024ம் ஆண்டு ஹைபிரிட் உருஸ் மற்றும் புதிய ஹைபிரிட் வி10 கொண்டு வர உள்ளோம். இது முற்றிலும் புதிய காரான ஹுராகனை தொடர்ந்து வரவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.