வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நடைபெற இருந்த ஜூனியர் கிளார்க் எழுத்து தேர்வில் கேள்விதாள் லீக் ஆனதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
![]()
|
இது குறித்து குஜராத் பஞ்சாயத்து சர்வீஸ் செலக்சன் தலைவர் சந்தீப் குமார் கூறியதாவது: குஜராத் மாநிலத்தில் பஞ்சாயத்து சர்வீஸ் செலக்சன் போர்டு சார்பில் ஜூனியர் கிளார்க் பதவிக்காக எழுத்து தேர்வு இன்று (29ம் தேதி) நடைபெறுவதாக இருந்தது. 1,181 காலி பணியிடங்களுக்காக நடைபெற இருந்த தேர்விற்காக சுமார் 9.5 லட்சம் பேர் விண்ணப்பத்து இருந்தனர். மாநிலம் முழுவதும்இந்த தேர்விற்காக 2,005 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
மாநிலம் முழுவதும் தேர்வு எழுதுவோர் பயணிப்பதற்காக இலவச பஸ்கள் விடப்பட்டு இருந்தன. இந்நிலையில் வதோதரா பகுதியில் கேள்வித்தாள் லீக் ஆனதாக தகவல் பரவியது. தகவல் கிடைத்ததை அடுத்து ஜாம் நகர் பகுதியில் தேர்வு எழுத வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாம்நகரில் மட்டும் சுமார் 26,882 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர்.
கேள்வித்தாள் லீக் ஆன தகவலை அடுத்து வதோதரா பகுதியில் சந்தேகத்தின் பேரில் இசாம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
![]()
|
மேலும் தற்போது நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மறு தேர்வு குறித்த விபரம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என குஜராத் பஞ்சாயத்து சர்வீஸ் செலக்சன் வாரியம் தெரிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement