வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை:'போலீஸ் துறையினரின் மன உறுதியை குறைக்கும் வகையில், அவதுாறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
![]()
|
அவரது அறிக்கை:
போலீஸ் துறையினர் தங்கள் பணியை செய்ததற்காக, அவர்கள் மாண்பை குறைப்பது போல், 'காவல் நாய்களே, எச்சைப் பிழைப்பு' போன்ற கோஷங்களை எழுப்புவது, காக்கி சட்டைக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்பதை, அரசியல் கட்சிகள் உணர வேண்டும்.
ஓரிரு போலீசார் செய்யும் தவறுகளுக்கு, ஒட்டு மொத்த போலீஸ் துறையினரையும் அவதுாறாகப் பேசுவது ஏற்க முடியாதது.
தங்கள் உயிரை துச்சமாகக் கருதி, மக்களைக் காக்க உழைக்கும் போலீஸ் துறையினரை, தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும், அரசியல் காரணங்களுக்கும், இது போன்று அவதுாறாகப் பேசுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.போலீஸ் துறையினரின் மன உறுதியை குறைக்கும் வகையில், கோஷங்களை எழுப்பும் தங்களது கூட்டணி கட்சியினர் மேல், போலீஸ் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
![]()
|
'டி.ஆர்.பாலு பேச்சு சரியான காரணம்'
தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு பேசுகையில், 'ஜி.எஸ்.டி., சாலையில் இருந்த சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என, மூன்று தெய்வங்களின் கோயில்களையும் இடித்தேன். தி.க., தலைவர் வீரமணி மீது கை வைக்க முயன்றால் நான் கையை வெட்டுவேன்' என்று பேசியுள்ளார்.
இதை கண்டித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவில்கள், தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்கு, டி.ஆர்.பாலுவின் கோவில் இடிப்பு பேச்சு சரியான காரணமாக அமைந்துள்ளது' என்றார்.
Advertisement