வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
ஹைதராபாத்: லோக்சபாவை கலைத்து விட்டு முன் கூட்டியே தேர்தலை சந்திக்க தயாரா என பா.ஜ.,வுக்கு சவால் விடுத்து உள்ளார் தெலங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் மகன் கே.டி.ராமராவ்.
![]()
|
இது குறித்து அவர் பேசியதாவது: பா.ஜ., தலைமையிலான அரசு தெலங்கானா மாநிலத்திற்கு எந்த வித நிதி உதவியும், புதிய நிறுவனங்களையும் அறிவிக்கவில்லை. ஆந்திர மாநிலத்தில் இருந்த பின்னர் மத்திய அரசு அளித்த வாக்குறுதிப்படி மறு சீரமைப்பு சட்டத்தின்படி தெலங்கானா மாநிலத்திற்கு அளித்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
![]()
|
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. பாக்.,நிலை போன்று தான் ஏற்பட உள்ளது. மத்திய அரசு கார்ப்பரேட் நண்பர்களுக்கு கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது. தைரியம் இருந்தால் பார்லி.,யை கலைத்துவிடுங்கள். பின்னர் அனைவரும் முன்கூட்டியே தேர்தலை சந்திக்கலாம் என சவால் விடுத்து உள்ளார்.
Advertisement