கூடலுார் : ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, தேனி மாவட்டம், கூடலுாரில் விற்பனை செய்ய முயன்ற தாய், மகள், மகன், மருமகன் உட்பட ஏழு பேரை கூடலுார் போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி, 47.
இவரது மகன் ரஞ்சித்குமார், 24; மகள்கள் சிவரஞ்சனி, 27; ரஞ்சிதா, 26; மருமகன் பிரபு, 38.
இவர்கள், ஆந்திராவிலிருந்து, 6 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, வீட்டில் வைத்து விற்பனை செய்ய முயன்றனர். இவர்களை கூடலுார் போலீசார் கைது செய்தனர்.
மேலும், விற்பனைக்கு உடந்தையாக இருந்த திருச்சி அருண்பாண்டி, 26 மற்றும் சபரிமணி, 25, ஆகிய இருவரையும் கைது செய்து, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட டூ - வீலர் மற்றும் 26 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது.