'ஓசியில மளிகை பொருள் வாங்குறது மட்டுமில்லாம, கமிஷன் வேற கேட்காவ வே...'' என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அண்ணாச்சி.
''யாருன்னு விபரமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆபீஸ், சென்னை கீழ்ப்பாக்கத்துல இருக்கு... தமிழகம் முழுக்க இருக்கிற கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு பண்டக சாலைகள் எல்லாத்தையும், இங்க இருக்கிற உயர் அதிகாரிகள் தான் கட்டுப்படுத்துதாவ வே...
![]()
|
''சர்வ அதிகாரமும் படைச்ச இந்த உயரதிகாரிகள், அவங்க வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை, கூட்டுறவுத் துறையின் பல்பொருள் அங்காடியில தான் வாங்குதாவ... ஆனா, பணம் தரமாட்டாவ வே...
''இது போதாதுன்னு, பல்பொருள் அங்காடிக்கு மளிகை பொருட்கள், 'சப்ளை' செய்ற கம்பெனிகள் இருக்குல்லா... அவங்ககிட்டயும் கமிஷன் வாங்கி தரச் சொல்லி, கீழ்மட்ட அதிகாரிகளை நெருக்குதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.