கூடலுார்:கூடலுார்- நாடுகாணி, சாலை சீரமைப்பு பணி துவங்கி உள்ளதால் டிரைவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகம், கேரளா, கர்நாடகாவை இணைக்கும், கூடலுார்- - நாடுகாணிக்கு இடைப்பட்ட, 12 கி.மீ., துாரமுள்ள சாலை, சில ஆண்டுகளாக, பல இடங்களில் சேதமடைந்தும் சீரமைக்கவில்லை. இதனால், இந்த வழித்தடத்தில் பயணிக்கும் வெளி மாநில சுற்றுலா பயணிகள், ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்து வந்தனர்.
இந்நிலையில், சாலை சீரமைக்க, 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பணிகள் துவங்க தாமதம் ஏற்பட்டதால், சாலையில் வாகனங்களை இயக்க தொடர்ந்து சிரமப்பட்டு வந்தனர்.
நேற்று இச்சாலை சீரமைக்கும் பணி நாடுகாணியில் துவங்கப்பட்டது. வெளி மாநில சுற்றுலா பயணிகள், ஓட்டுனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.