பந்தலுார்:பந்தலுார், மழவன் சேரம்பாடி பகுதியில், ஐந்து ஜோடி ஏழை மணமக்களுக்கு, இந்து கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில், திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
பந்தலுார் அருகே மழவன் சேரம்பாடி மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்து கோவில் பூஜாரிகள் பேரவை மாவட்ட செயலாளர் கவிந்தன் வரவேற்றார். பா.ஜ., மாநில விவசாய பிரிவு அணி தலைவர் நாகராஜ் தலைமை வகித்து, திருமணங்களை நடத்தி வைத்தார். தொடர்ந்து, ஐந்து ஜோடி மணமக்களுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஆசி வழங்கினர்.
பா.ஜ., மாவட்டத் தலைவர் மோகன்ராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் சவுந்தர பாண்டியன், பூஜாரிகள் பேரவை நிர்வாகி மனோஜ், பொதுச் செயலாளர் ஜலேந்திரன், செயலாளர் பிரபாகரன், உட்பட பலர் பங்கேற்றனர். பூஜாரிகள், பேரவை பந்தலுார் நகர தலைவர் முரளி நன்றி கூறினார்.