வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் நேற்று 20 மணிநேரம் காத்திருந்தனர்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க ரதசப்தமியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. நேற்று காலை 32 காத்திருப்பு அறைகளை கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தர்கள் தர்ம தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
தர்ம தரிசனத்திற்கு 20 மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு நான்குமணி நேரமும் பக்தர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 80 ஆயிரத்து 094 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தினர்.
![]()
|
நடைபாதையில் செல்பவர்களுக்காக வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது இதுவரை துவங்கப்படவில்லை.