வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால்:மத்திய பிரதேசத்தில் கடுமையான மதுபான கொள்கைகளை அறிவிக்கக் கோரி பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் உமாபாரதி, கோவிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
![]()
|
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி கடைசி தேதியில் மதுபான கொள்கை அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.
இங்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி, போபாலில் உள்ள அயோத்யா நகரில் மதுபான கடைக்கு அருகில் உள்ள கோவிலில் தர்ணாவில் நேற்று ஈடுபட்டார்.
![]()
|
இது குறித்து அவர் கூறியதாவது:
மதுபான கடைகளில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். இது தொடர்பான மதுபான கொள்கையை மாநில அரசு அறிவிக்க வேண்டும்.
அவ்வாறு அறிவித்தால், 2003ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, 230 தொகுதிகளில் 165ல் பா.ஜ., வென்றது போன்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வரும் தேர்தலிலும் பெற முடியும்.
வரும், 31ம் தேதி வரை என்னுடைய போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, 2003 தேர்தலில் பா.ஜ., வென்று உமாபாரதி முதல்வரானார். ஆனால், எட்டு மாதங்களில் அவர் பதவியில் இருந்து விலகினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement