வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாப்பிரெட்டிப்பட்டி: -''ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில், அனைத்து அமைச்சர்களும் தேர்தல் பணியாற்றுவர்; கொள்ளையடித்த பணத்தை வாரி இறைப்பர்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி எம்.பி., பேசினார்.
தர்மபுரி மாவட்டம் மணியம்பாடியில், கிழக்கு மாவட்ட, பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி பேசியதாவது:
தி.மு.க., ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், அடுத்த முறை வராது. தேர்தலில் மக்கள் தி.மு.க.,வை தேர்வு செய்ய மாட்டார்கள். தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதால், அடுத்த முறை நிச்சயமாக ஆட்சிக்கு வராது. அ.தி.மு.க., இன்றைக்கு நாலாக பிரிந்து கிடக்கிறது; அவர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
![]()
|
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.