வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர் : பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளின் கூட்டமைப்பான அனைத்து ஹுரியத் மாநாடு அலுவலகத்தை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு முடக்கியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை கொள்கையாக உடைய, 26 பிரிவினைவாத இயக்கங்களின் கூட்டமைப்பான அனைத்து ஹுரியத் மாநாட்டின் அலுவலகம், ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பாக் பகுதியில் உள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் போராட்டத்தை துாண்டும் வகையில், பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்ததாகக் கூறி, ஹுரியத் மாநாடு அலுவலக நிர்வாகிகளில் ஒருவரான, நயீம் அகமது கானை, என்.ஐ.ஏ., அதிகாரிகள், 2017ல் கைது செய்தனர்.
![]()
|
நீதிமன்ற காவலில் உள்ள இவரிடம் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இவருக்கு சொந்தமான அனைத்து ஹுரியத் மாநாடு அலுவலகத்தை என்.ஐ.ஏ., அமைப்பு நேற்று முன்தினம் முடக்கியது. புதுடில்லி பட்டியாலா சிறப்பு நீதிமன்ற உத்தரவை அடுத்து, இதற்கான 'நோட்டீஸ்' அலுவலக வெளிப்புறச் சுவரில் ஒட்டப்பட்டது.