வேட்பாளர்களின் குற்ற விபரம்: விளம்பரம் செய்ய உத்தரவு

Added : ஜன 30, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: 'இடைத்தேர்தல் வேட்பாளர்கள், தங்கள் குற்ற வழக்குகள் தொடர்பான விபரங்களை, நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் குற்ற வழக்குகள் தொடர்பான விபரங்களை, நாளிதழ்கள் மற்றும்
Sathya Pratha Sahoo, election commissioner, TN election commission, தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 'இடைத்தேர்தல் வேட்பாளர்கள், தங்கள் குற்ற வழக்குகள் தொடர்பான விபரங்களை, நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் குற்ற வழக்குகள் தொடர்பான விபரங்களை, நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் உரிய படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.

குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் குற்ற வழக்கு விபரங்களை, செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகள், தங்கள் கட்சி இணையதளத்தில், உரிய படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.


latest tamil news

இவ்விளம்பரங்கள் வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான கடைசி தினத்திற்கு மறுநாள் முதல், ஓட்டுப்பதிவு முடிவுறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் வரை, மூன்று முறை வெவ்வேறு நாட்களில் வெளியிடப்பட வேண்டும்.

இது தொடர்பாக, தமிழ், ஆங்கில செய்தித்தாள், தொலைக்காட்சி அலைவரிசைகளின் பட்டியலை, www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
30-ஜன-202313:30:44 IST Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan ஒரு பத்து பக்க இலவச இணைப்பாக வெளியிட வேண்டியிருக்கும். பாவம். செங்கல் திருடியது, கல் எறிந்தது, கோயிலை இடித்து, ஓசி பிரியாணிக்கு அடித்துக்கொண்டது, இப்படி நிறைய கேஸ் பக்கம் பக்கமாக இருக்கும்.
Rate this:
Cancel
Muthu - Nagaipattinam,இந்தியா
30-ஜன-202313:08:37 IST Report Abuse
Muthu இன்று கூட ஒரு வீடியோ பார்த்தேன்.. TR .பாலு என்று ஒரு தமிழ் MP சொல்றார்... பல கோயில்களை நானே இடித்து உள்ளேன்... அதுவும், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி கோயில்களை இடித்துவிட்டு, ஊரை ஏமாற்றி கள்ள ஓட்டு போடச்சொல்லி வெற்றி பெற்றேன் என்று.. அவரை பதவியை பறித்து விட்டு வெளியே விரட்டுங்கள்... ஒரு ஆஃப்ரோவ்வராக உண்மையை ஒப்புக்கொண்டு விட்டார். வேறென்ன வேண்டும் இதை விட...
Rate this:
Cancel
Sakthi Parthasarathy - Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜன-202312:43:58 IST Report Abuse
Sakthi Parthasarathy குற்ற வழக்கு உள்ளவர்கள் வேட்பு மனு தள்ளுபடியில் ஆரம்பித்து நடை பெரும் குற்ற வழக்குகள் விளம்பரப்படுத்துவது என அனைத்தும் தேர்தல் துறை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X