வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'இடைத்தேர்தல் வேட்பாளர்கள், தங்கள் குற்ற வழக்குகள் தொடர்பான விபரங்களை, நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் குற்ற வழக்குகள் தொடர்பான விபரங்களை, நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் உரிய படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.
குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் குற்ற வழக்கு விபரங்களை, செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகள், தங்கள் கட்சி இணையதளத்தில், உரிய படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.
![]()
|
இது தொடர்பாக, தமிழ், ஆங்கில செய்தித்தாள், தொலைக்காட்சி அலைவரிசைகளின் பட்டியலை, www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.