வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர்: ''செத்துப்போன பாம்பை யார் நினைப்பார்கள்?,'' என்று, டி.ஆர்.பாலுவின் 'கையை வெட்டுவேன்' பேச்சுக்கு, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பதிலடி கொடுத்துள்ளார்.
திருப்பூரில் நேற்று நடந்த ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுக்குழுவை துவக்கி வைத்த, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்பூர், கோவை மாவட்டங்களில், வங்கதேசத்தை சேர்ந்த இஸ்லாமியர் சட்ட விரோதமாகவும், போலி ஆவணங்களை பயன்படுத்தியும் தங்கியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக, தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
![]()
|
எம்.பி., டி.ஆர்.பாலு, சுயலாப நோக்கத்துடன், 'சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவோம்' என்கிறார். 'வீரமணி மீது கை வைத்தால், கையை வெட்டுவேன்' என்று கூறுகிறார். செத்துப்போன பாம்பை யாரும் நினைப்பாரில்லை. அவரது அமைப்பும் காணாமல் போய்விட்டது, மக்களும் அவரை கண்டுகொள்வதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.