வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், பன்னீர்செல்வம், பழனிசாமி என இரு அணிகளும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. தனித்தனியாக தேர்தல் பணி குழுக்களையும் நியமித்துள்ளன.
இரு அணிகளின் தலைவர்களும், பா.ஜ.,விடம் ஆதரவு கேட்டுள்ளனர். ஆனால், 'கூட்டணியில் அ.தி.மு.க., தான் பெரிய கட்சி' எனக்கூறிய பா.ஜ., இதுவரை யாருக்கு ஆதரவு என்று அறிவிக்கவில்லை.

இந்நிலையில், பா.ஜ., மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், சென்னை கமலாலயத்தில் நாளை நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில், தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை, பா.ஜ., அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.