சென்னை: திமுக ஆட்சியில் பலன்பெறாத மக்களே இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், அதிமுக ஆட்சியில் எவ்வித சான்றிதழ் சரிபார்ப்புகளும் இல்லாமல் நியமிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால்தான், ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு பணி கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இன்னும் 5 நாட்களில் 800 நர்ஸ்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது. 22 மாத கால திமுக ஆட்சியில் பலன்பெறாத மக்களே இல்லை. தமிழகத்தில் சாணிப் பவுடர்க்கு தடை விகிக்கின்ற அரசாணை தயாராகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.