புதுடில்லி: மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தியின் நினைவு நாளில், அவரை வணங்குகிறேன், அவருடைய ஆழ்ந்த எண்ணங்களை நினைவு கூர்கிறேன். நமது தேசத்தின் சேவையில் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்.
அவர்களின் தியாகங்களை ஒருபோதும் மறக்க முடியாது. மேலும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக உழைக்க வேண்டும் என்ற நமது உறுதியை மேலும் வலுப்படுத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காங்., எம்.பி ராகுல் வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தி முழு நாட்டையும் அன்புடனும், அனைத்து மதங்களுடனும் சமத்துவத்துடன் வாழவும், உண்மைக்காக போராடவும் கற்றுக் கொடுத்தார். தேசத் தந்தை மகாத்மா காந்தியின் தியாகத் திருநாளில் அவருக்கு கோடிக்கணக்கான வணக்கங்கள். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு, கவர்னர் ரவி , முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
