சென்னை: மருத்துவத்துறை இயக்குநர் பணியிடங்களை முறையாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மருத்துவத்துறை இயக்குநர் பணியிடங்களை முறையாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசின் மெத்தனப் போக்கால் மருத்துவச் சேவையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பதவிகளை காலியாக வைத்துள்ள திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.