சென்னை, கன்னியாகுமரியை அடுத்து நாமக்கல்லில் மகாத்மாவுக்கு 'அஸ்திமலர் பீடம்'

Added : ஜன 30, 2023 | |
Advertisement
நாமக்கல், ஜன. 30-மகாத்மா காந்தியின் அஸ்தி, தமிழகத்தில், கன்னியாகுமரி மற்றும் சென்னை காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் அவரது அஸ்தி வைத்து பீடம் கட்டப்பட்டுள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு இல்ல நுாலக வாசகர் வட்ட தலைவர் மோகன் கூறியதாவது:நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா,



நாமக்கல், ஜன. 30-
மகாத்மா காந்தியின் அஸ்தி, தமிழகத்தில், கன்னியாகுமரி மற்றும் சென்னை காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் அவரது அஸ்தி வைத்து பீடம் கட்டப்பட்டுள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு இல்ல நுாலக வாசகர் வட்ட தலைவர் மோகன் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, அக்கரைப்பட்டி கிராமம், தொட்டியப்பட்டி ஊராட்சியில், நான் பிறந்து வளர்ந்தேன். அப்பகுதியை சேர்ந்த பெரியண்ணன் என்பவர், 1936ல், மோகாமுறை உதவிபெறும் துவக்கப்பள்ளியை துவங்கினார். நான், அந்த பள்ளியில் தான், துவக்கப்பள்ளியை முடித்தேன்.
தற்போது, 'ஆசிரியர் காந்தி நிலையம்' என்ற பெயரில், மோகாமுறை அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியை, கோவிந்தராஜ் என்ற ஆசிரியர் நடத்தி வருகிறார். 1948, ஜன., 30ல், மகாத்மா காந்தி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். அதன்பின், அவரது உடல் டில்லி ராஜ்கோட்டில் எரியூட்டப்பட்டு, அவரது அஸ்தி, நாடு முழுவதும் துாவுவதற்காகவும், கன்னியாகுமரி கடலில் கரைப்பதற்காகவும், தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டு, ஆங்காங்கே வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
ஈரோடு நகருக்கு வந்தபோது, எங்கள் பள்ளி நிர்வாகி காந்தியவாதி பெரியண்ணன், அஸ்தியில் ஒரு பகுதியை எடுத்து வந்து, 1948, பிப்., 27ல், தன் வீட்டில் வைத்து, 'அஸ்திமலர் பீடம்' அமைத்து, மகாத்மாவுக்கு சமாதி எழுப்பினார். அதற்கான கல்வெட்டும் வைத்தார்.
அப்போது, பிரபலமாக இருந்த ராட்டை கழகத்தின் தலைவர் சிவகுருநாதன், காந்தி அஸ்தி உள்ள பீடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, 1987ல், சுதந்திர போராட்ட தியாகி, காளியண்ணனை அழைத்து வந்து, மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார்.
தமிழகத்தில் கன்னியாகுமரி காந்தி மண்டபம், சென்னை காந்தி மண்டபத்தையடுத்து, காந்தியின் அஸ்தி இருக்கும் இடம், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, தொட்டியப்பட்டி கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று அவரது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X