இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 45 பேர் கொல்லப்பட்டதாகவும் , 50க்கும் மேற்பட்டோ் காயமுற்றதாகவும் பாக்., செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. போலீஸ் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியின் ஒரு மசூதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது.
தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் பலர் காயமுற்ற நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். பலத்த சப்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. இது மனித வெடிகுண்டு தாக்குதல் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
