Rahul remembers what happened on the pilgrimage | நிறுத்த நினைத்த யாத்திரையை தொடர்ந்து நடத்த என்ன காரணம்: ரகசியம் உடைத்த ராகுல் | Dinamalar

நிறுத்த நினைத்த யாத்திரையை தொடர்ந்து நடத்த என்ன காரணம்: ரகசியம் உடைத்த ராகுல்

Updated : ஜன 30, 2023 | Added : ஜன 30, 2023 | கருத்துகள் (15) | |
ஸ்ரீ நகர்: பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டத்தில் யாத்திரையில் நடந்ததை காங்., எம்.பி ராகுல் நினைவுக்கூர்ந்து பேசினார்.காங்கிரஸ் எம்.பி ராகுல் மேற்கொண்ட கன்னியாகுமரி - காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை இன்று(ஜன.,30) நிறைவு பெற்றது.இதையடுத்து பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டம் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே நடந்தது.இதில் காங்கிரஸ் தலைவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீ நகர்: பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டத்தில் யாத்திரையில் நடந்ததை காங்., எம்.பி ராகுல் நினைவுக்கூர்ந்து பேசினார்.


காங்கிரஸ் எம்.பி ராகுல் மேற்கொண்ட கன்னியாகுமரி - காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை இன்று(ஜன.,30) நிறைவு பெற்றது.

இதையடுத்து பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டம் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே நடந்தது.




latest tamil news


இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா , திமுக எம்பி திருச்சி சிவா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: யாத்திரையில் நான் அதிகம் கற்றுக் கொண்டேன். யாத்திரையின் நடுவில், கடும் கால் வலியால் அவதிப்பட்டேன். யாத்திரையை முழுமையாக நிறைவு செய்ய முடியுமா என பயம் ஏற்பட்டது. ஆனால் யாத்திரையின் போது சிறுமி ஒருவர் அளித்த கடிதத்தினை படித்தேன். நான் கடிதத்தை படிக்க ஆரம்பித்தேன்.


அந்த சிறுமி கடிதத்தில், யாத்திரையின் போது உங்களுக்கு முழங்கால் வலி ஏற்பட்டு இருக்கும். அதை நான் உங்கள் முகத்தில் தெரிந்து கொண்டேன். என்னால் உங்களுடன் நடக்க முடியாது. ஆனால் உங்களுடன் மானசீகமாக நான் நடந்தேன். நீங்கள் எனக்காகவும் எனது எதிர்காலத்திற்காகவும் நடைபயணம் செய்தீங்க. அது எனக்கு மன வலியை ஏற்படுத்தியது. எனக் கூறியிருந்தார். இந்த கடிதம் யாத்திரையை தொடர்ந்து நடத்த உத்வேகமாக இருந்தது.



latest tamil news


யாத்திரையின் போது, என்னிடம் நான்கு குழந்தைகள் சந்தித்து பேசினர். அவர்கள் ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்தவர்கள் போல் இருந்தனர். அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் குளிர் காலத்திற்கு உகந்தது அல்ல. ஆதலால் நான்கு குழந்தைகளும் குளிரில் நடுங்கினர். நான் அவர்களை கட்டிப்பிடித்தேன். ஒருவேளை உணவிற்கு கூட கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்தவர்களாக அவர்கள் இருக்கலாம்.


அவர்கள் குளிர்காலத்திற்கு உகந்த ஸ்வெட்டர் அணியவில்லை. அதனைப் பார்த்தவுடன், நானும் ஸ்வெட்டர் அணியக்கூடாது என்று நினைத்தேன். ஆதலால் யாத்திரையை டி- சர்ட் அணிந்து மேற்கொண்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X