ஸ்ரீ நகர்: காங்கிரஸ் எம்.பி ராகுல் மேற்கொண்ட கன்னியாகுமரி - காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை இன்று(ஜன.,30) நிறைவு பெற்றது. காஷ்மீரின் மவுலானா ஆசாத் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து தேசியக்கொடியை ராகுல் ஏற்றினார்.
இதையடுத்து கொட்டும் பனிமழைக்கு இடையே, ராகுலுக்கு தங்கை பாசம் ஏற்பட்டது போல தெரிகிறது. பின் அதனை வெளிப்படுத்தும் வகையில், ராகுல், பிரியங்கா பனிக்கட்டி வைத்து சிறிது நேரம் விளையாடினர். இதைக் கண்ட காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.