டி.ஆர்.பாலு வீடியோவை எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்: அண்ணாமலை சவால்

Updated : ஜன 30, 2023 | Added : ஜன 30, 2023 | கருத்துகள் (35) | |
Advertisement
சென்னை: திமுக எம்.பி., டி.ஆர்.பாலு 'கோவிலை இடித்தேன்' எனக் கூறிய வீடியோவை பரப்பிய விவகாரத்தில், அந்த வீடியோ முழுமையானது எனவும், எடிட் செய்யப்பட்டது என நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகுவதாகவும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.திமுக எம்.பி., டி.ஆர்.பாலு சமீபத்தில், 'நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில்களை இடித்தேன்' என பேசும் சுமார் 40 வினாடி கொண்ட
Annamalai, BJP, TR Balu, Hindu Temple, பாஜக, அண்ணாமலை, டிஆர் பாலு, கோவில் இடிப்பு, வீடியோ, எடிட், சவால், அரசியல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: திமுக எம்.பி., டி.ஆர்.பாலு 'கோவிலை இடித்தேன்' எனக் கூறிய வீடியோவை பரப்பிய விவகாரத்தில், அந்த வீடியோ முழுமையானது எனவும், எடிட் செய்யப்பட்டது என நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகுவதாகவும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.திமுக எம்.பி., டி.ஆர்.பாலு சமீபத்தில், 'நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில்களை இடித்தேன்' என பேசும் சுமார் 40 வினாடி கொண்ட வீடியோவை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலடியாக திமுக.,வினர் டி.ஆர்.பாலு பேசிய முழு வீடியோவையும் வெளியிட்டனர். மேலும், முழு வீடியோவையும் வெளியிடாமல் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டதாக அண்ணாமலையை விமர்சித்திருந்தனர்.திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் இது குறித்து கூறுகையில், 'அண்ணாமலை, வெட்டி ஒட்டும் பணியில் ஈடுபடுகிறார். திமுக.,வினர் பேசுவதை வெட்டி ஒட்டி பா.ஜ.,வை வளர்க்கலாம் என அண்ணாமலை முயற்சிக்கிறார்' என விமர்சித்து பேசினார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் அண்ணமாலை கூறியதாவது:
சவால்


latest tamil news

பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தில் உண்மையில்லை; எனவே அது பற்றி கவலையில்லை. பார்லிமென்ட் தேர்தல்தான் எங்கள் இலக்கு, இடைத்தேர்தல் அல்ல; இது பா.ஜ.,வின் பலத்தை நிரூபிக்கும் தேர்தல் அல்ல. நான் வெளியிட்ட வீடியோவை வெட்டி ஒட்டவில்லை.

நான் வெளியிட்ட வீடியோ முழுமையானது. எடிட் செய்யப்பட்டது என நிரூபித்தால் அரசியலை விட்டு விலகவும் தயார். டி.ஆர்.பாலு வீடியோ நாளை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (35)

W W - TRZ,இந்தியா
31-ஜன-202307:57:03 IST Report Abuse
W W வந்த வழியை மறந்தவர்கள்(Such Low Level) திமிர் பேச்சு அந்த ஆண்டவனலும் காப்பற்ற முடியாது. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.(Let us Wait & See)
Rate this:
Cancel
Unmai vilambi - Chennai,இந்தியா
31-ஜன-202307:19:04 IST Report Abuse
Unmai vilambi பொய்யை மட்டுமே பிரதானமாக கொண்டு செயல்படும் திமுகவிற்கு எதிராக நேர்மையாக செயல்பட வேண்டும் என்று அவசியம் இல்லை
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
31-ஜன-202306:51:46 IST Report Abuse
S.kausalya இப்போது பாருங்கள் வேறு ஒரு மாநில மத்திய பிரச்சனையை கிளப்பி, இதை மக்கள் மறக்க மடை மாற்றம் செய்வார்கள். திமுக வின் ஐடி விங்கும் அவர் பேசவே இல்லை. அவர் அந்த நேரத்தில், அறிவாலயத்தில் முக்கிய கூட்டத்தில் பங்கு கொண்டு இருந்தார். என போட்டோ ஷாட் எடுத்து வெளியிடுவார்கள். அதை இவர்களின் பல்லக்கு தூக்கிகளும் மக்களிடம் அப்படியே பரை சாற்றும். பணத்திற்காக ஓட்டையே விற்பவர்கள் இதை அப்படியே ஏற்றுக் கொண்டு மறுபடியும் காசு வாங்கி கொண்டு ஓட்டு போட்டு அவரின் திரண்ட சொத்துக்களை அவர் காப்பாற்றி கொள்ள வழி செய்வார்கள். எவ்வளவு மோசமான பேர்வழியாக இருந்தால், மௌன குருவே இரண்டாம் கட்டத்தில் இவரை மந்திரியாக ஏற்க்க மாட்டெனென்று சொல்லி இருப்பார். ஆனால் நம் மக்கள் இவருக்கு ஓட்டு போட்டு மறுபடியும் MP ஆக்கினார்கள். அவர்களின் தலை சொன்னபடி, தமிழர்கள் சோற்றாள் அடித்த பிண்டங்கள்தான் இந்த வீர தமிழர்கள். (டாஸ்மாக் விளைவால் உடலிலும் வலு இல்லை. படிப்பறிவு இல்லாததால் மூளை செயல் திறனும் இல்லை. எனவே சொன்னது சரிதான் பிண்டங்கள் என்று. ஆனால் பேசுவது வீர தமிழர்கள் என்று.)
Rate this:
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
31-ஜன-202320:00:54 IST Report Abuse
Davamani Arumuga Gounder.. ரூபாய் இரண்டாயிரம், மூன்றாயிரம் கொடுத்து டிக்கட் வாங்கி அதிகாலை 3 மணிக்கு எழுந்து, தியேட்டருக்கு சென்று, வரிசையில் வீராவேசமாக சண்டை போட்டு படம் பார்க்கிறோமே .. நாங்களெல்லாம் வீரத்தமிழர் இல்லையாக்கும் ? எங்கள் வீரச்செயல்களைக்கண்டு உமக்கு மிகவும் பொறாமைதானே ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X