ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரம் அருகே காஞ்சனகிரி மலை உள்ளது. மலைமீது 300 ஆண்டுகள் பழமையான காஞ்சனகிரிஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. லாலாப்பேட்டை கிராம மக்கள் கோவிலை பராமரித்து வந்தனர்.
இந்நிலையில், காஞ்சனகிரிஸ்வரர் கோவிலை லாலாப்பேட்டை மக்கள் பராமரிக்கக்கூடாது, முகுந்தராயபுரம் ஊராட்சியே பராமரிக்கும் என கடந்த 26 ம் தேதி முகுந்தராயபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆதிரமடைந்த லாலாப்பேட்டை மக்கள் நேற்று கடையடைப்பு நடத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லாலாப்பேட்டை, முகுந்தராயபுரம் இரு கிராம மக்களும் இந்த கோவிலுக்கு உரிமை கொண்டாடுவதால் இந்து சமய அறநிலையத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.