வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காந்திநகர்: ஆசிரம பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என குஜராத் கோர்ட் தெரிவித்தது.
வட மாநிலங்களில் பிரபலமான சாமியார், ஆசாராம் பாபு, 72. இவருக்கு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்கள் உள்ளன.
![]()
|
2013 ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்த, பெண்ணை, சாமியார் ஆசாராம் பாபு, பலாத்காரம் செய்ததாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
வழக்கு காந்திநகர் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என அறிவித்த நீதிபதி டி.கே.சோனி, இன்று (ஜன.31) தண்டனை விவரத்தை அறிவிக்கிறார்.