வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படத்திற்கு ரஷ்யா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த பிபிசி நிறுவனம், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடியை தொடர்பு படுத்தியுள்ளது. இதற்கு பிரிட்டன், அமெரிக்கா நாடுகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.
![]()
|
இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜக்ராவோவா கூறியதாவது, ஆவணப்பட விவகாரத்தில் தகவல் போரை பிபிசி நடத்துகிறது. இது தனிப்பட்ட கொள்கையைப் பின்பற்றும் உலகளாவிய அதிகார மையங்களுக்கு எதிரானது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement