திருப்பூர்:சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூச தேர்த் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் கோஷத்துடன் கொடியேற்றம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம், சிவன்மலை ஸ்ரீசுப்ரமணியசுவாமி கோவிலின் தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த, 27ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேர்த் திருவிழாவுடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. நேற்று காலை வீரகாளியம்மன் மலைக் கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜையும், மயில் வாகன அபிஷேகமும், விநாயகர் வழிபாடு நடந்தது.
இதனால், முருகன் கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில், காலை, 11:58 மணியளவில் கொடி ஏற்றப்பட்டது. சுப்ரமணியர், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். வரும் 5ம் தேதி மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.