திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூர் அருகே வயலில் 2 அடி உயர சிவலிங்கம் உள்ளது. சிலையின் அடிப்பகுதி பூமியில் புதைந்துள்ளது. சுவாமிக்கு ருத்ராட்ச மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
திருவெற்றியூர் கிராம மக்கள் கூறுகையில், லிங்கம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. சுயம்பு லிங்கமாக தானாக தோன்றியுள்ளது. இங்கு தொல்லியல் துறையினர் பூமியை தோண்டி ஆய்வு செய்தால் பல வியத்தகு தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இங்கு கோயில் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.