6,000 கிலோ  ரேஷன் அரிசி பறிமுதல்
6,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

6,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Added : ஜன 30, 2023 | |
Advertisement
திருச்சி : திருச்சியில், வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்ற, 6,000 கிலோ ரேஷன் அரிசியை, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., சுதர்சன், இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம், திருச்சி, டி.வி.எஸ்., 'டோல்கேட்' பகுதியில் வாகன சோதனை செய்தனர்.பின்,



திருச்சி : திருச்சியில், வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்ற, 6,000 கிலோ ரேஷன் அரிசியை, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.

திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., சுதர்சன், இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம், திருச்சி, டி.வி.எஸ்., 'டோல்கேட்' பகுதியில் வாகன சோதனை செய்தனர்.

பின், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல்படி, தனரத்தினம் நகரில் சோதனை செய்தனர். ஒரு இடத்தில், சரக்கு வாகனங்களில் சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

அந்த சாக்கு முட்டைகளை சோதனை செய்ததில், 6,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. விசாரணையில், திருச்சி, பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த ஷேக் மைதீன் மற்றும் சிலர், ரேஷன் அரிசியை வாகனங்களில் கடத்த முயன்றது தெரிந்தது.

அங்கிருந்த வாகனங்களையும், 6,000 கிலோ ரேஷன் அரிசியையும் கைப்பற்றிய குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து, ரேஷன் அரிசியை பிற மாநிலங்களுக்கு கடத்த முயன்றவர்களை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X