தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டலம் கடப்பேரியில், அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளி உள்ளது.
இப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட, ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
தொடர்ந்து, சேலையூரில், 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம்; மண்டலம் 4ல், 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற நல வாழ்வு மையத்தை, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, தாம்பரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
அதேபோல பெருங்களத்துார், காமராஜர் சாலையில், 2 கோடி ரூபாயில் கட்டப்படும் வணிக வளாகம்; பெருங்களத்துாரில், 2.50 கோடி ரூபாயில் எரிவாயு தகன மேடை ஆகிய பணிகளையும் ஆய்வு செய்தனர்.