லட்சத்தீவு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன்

Updated : ஜன 31, 2023 | Added : ஜன 30, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: கொலை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் லட்சத்தீவு எம்.பி., முகமது பைசல் மீதான தண்டனையை கேரள உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், அத்தொகுதிக்கான இடைத்தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன். லட்சத்தீவு தொகுதி எம்.பி.,யான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமது பைசல். 2009 முகமது சலியா என்பவரை கொலை முயற்சி செய்ததாக முகமது பைசல்
லட்சத்தீவு லோக்சபா ,தொகுதி இடைத்தேர்தல் ரத்து, கமிஷன்

புதுடில்லி: கொலை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் லட்சத்தீவு எம்.பி., முகமது பைசல் மீதான தண்டனையை கேரள உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், அத்தொகுதிக்கான இடைத்தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன்.

லட்சத்தீவு தொகுதி எம்.பி.,யான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமது பைசல். 2009 முகமது சலியா என்பவரை கொலை முயற்சி செய்ததாக முகமது பைசல் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை விசாரித்த கவரட்டி செசன்ஸ் நீதிமன்றம் முகமது பைசல் குற்றவாளி என உறுதி செய்ததுடன், 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.


latest tamil news



இதையடுத்து 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, முகமது பைசலை எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக லோக்சபா செயலகம் அறிவித்துள்ளது.



தேர்தல் ஆணையமும் லட்சத்தீவு லோக்சபா தொகுதிக்கு பிப்.27-ல் இடைத்தேர்தல் நடத்தப்படும், ஓட்டு எண்ணிக்கை மார்ச் 02-ல் வெளியிடப்படும் என அறிவிக்கை வெளியிட்டது.


இந்நிலையில் தண்டனையை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் தொடரப்பட்ட அப்பீல் வழக்கை கடந்த 25-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், எம்.பி., பைசல் உள்ளிட்ட நால்வருக்குமான தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.
தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால், இடைத்தேர்தலை ரத்து செய்தததுடன், தேதி அறிவிப்பை தேர்தல் கமிஷன் இன்று வாபஸ் பெற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

Kundalakesi - Coimbatore,இந்தியா
31-ஜன-202306:37:14 IST Report Abuse
Kundalakesi Keli koothu intha neethi thurayum india sattamum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X