'நிதி ஒதுக்காததால, பஞ்சாயத்துகள் பஞ்சராகி கிடக்குது பா...'' என, சுக்கு காபியை குடித்தபடியே பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த ஊர்லன்னு விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''கிராம பஞ்சாயத்துகள்ல, வளர்ச்சிப் பணிகளை செய்ய, மாநில நிதிக்குழு மூலமா தான் நிதி ஒதுக்குறாங்க... வேலுார் மாவட்டத்துல, 200 கிராம பஞ்சாயத்துகளுக்கு ஆறு மாசமா நிதி ஒதுக்காததால, வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடக்குது பா...
![]()
|
''பஞ்சாயத்துகள்ல பணியாற்றும் செயலர், துாய்மை பணியாளர்கள், 'பம்ப் ஆப்பரேட்டர்'களுக்கு சம்பளம் குடுக்க முடியல... மின் கட்டணம் கட்டாம, தெரு விளக்குகள் எரியாம கிராமங்கள் இருண்டு கிடக்குது...
''ஓட்டு போட்டு ஜெயிக்க வச்ச மக்களுக்கு பதில் சொல்ல முடியாம, பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள் விரக்தியில இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.