நன்றி சொல்ல வேண்டும்!
ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப் பட்டதற்கு பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும், காங்கிரஸ் எம்.பி., ராகுல் நன்றி கூற வேண்டும். இதனால் தான், ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில் அவரால் மூவர்ணக் கொடியை ஏற்ற முடிந்தது.
நரோத்தம் மிஸ்ரா
மத்திய பிரதேச உள்துறை அமைச்சர், பா.ஜ.,
புதிய ராகுலை பார்ப்பீர்கள்!
ஒற்றுமை யாத்திரை முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த நாடு புதிய ராகுலை காணப் போகிறது. நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளிடம் இருந்து ராகுல் காப்பாற்றுவார்.
ஏ.கே.அந்தோணி
கேரள முன்னாள் முதல்வர், காங்.,
உயிரை மாய்த்துக் கொள்வேன்!
எங்களுடன் பா.ஜ., இருந்தபோது, முஸ்லிம் மக்கள் இக்கட்சிக்கு ஓட்டளித்தனர். இதற்கு கூட்டணி தான் காரணம். இனி, பா.ஜ.,வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்கு பதில், என் உயிரைக்கூட மாய்த்துக்கொள்ள தயார்.
நிதிஷ்குமார்
பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்