பல்லடம்:காங்., எம்.பி., ராகுல் மேற்கொண்ட, 150 நாள் இந்திய ஒற்றுமை பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. பல்லடம் நகர காங்., கட்சி சார்பில் இந்நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
பல்லடம், பனப்பாளையம் பகுதியில் கொடியேற்றி விழாவுடன் நிகழ்ச்சி துவங்கியது. நகர காங்., கட்சித் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார்.
ஒற்றுமை பயணம் குறித்து, பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. தொடர்ந்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன. நகர காங்., கட்சி நிர்வாகிகள் மணிராஜ், சதாசிவம் ராமச்சந்திரன், நரேஷ், உத்திரமூர்த்தி, சாகுல் ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர்.