புதுடில்லி பார்லிமென்டில் உள்ள 'கேன்டீனில்' இனி சிறு தானிய உணவு வகைகளும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்டில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் எம்.பி.,க்களுக்காக பிரத்யேகமான கேன்டீன் செயல்பட்டு வருகிறது. இங்கு, மிக குறைந்த விலையில் தரமான உணவுகள் கிடைக்கும்.
![]()
|
தற்போது மத்திய அரசு சிறு தானிய உணவு வகைகளை ஊக்குவித்து வருகிறது. இதையடுத்து, பார்லிமென்ட் கேன்டீனில் சிறு தானிய உணவுகளையும் தயாரிக்கும்படி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தி உள்ளார்.
ராகி தோசை, வேர்க்கடலை சட்னி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விளையும் தானியங்களில் தயாரிக்கும் உணவு வகைகளும் இனி பார்லிமென்ட் கேன்டீனில் கிடைக்கும். ஆரோக்கியம் மற்றும் பாரம்பரிய உணவுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement