பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல் ஆகிறது

Updated : ஜன 31, 2023 | Added : ஜன 31, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை, இன்று பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார்.பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் பார்லிமென்டில் தாக்கல் செய்த பிறகு, தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார். இச்சந்திப்பின்போது, அவருடன் நிதியமைச்சகத்தின் உயரதிகாரிகளும்
பொருளாதார ஆய்வறிக்கை , இன்று தாக்கல் ஆகிறது

புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை, இன்று பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார்.
பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் பார்லிமென்டில் தாக்கல் செய்த பிறகு, தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார். இச்சந்திப்பின்போது, அவருடன் நிதியமைச்சகத்தின் உயரதிகாரிகளும் இடம்பெறுகின்றனர்.

பொருளாதார ஆய்வறிக்கையானது, அனந்த நாகேஸ்வரனின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இரு பகுதிகள் கொண்டதாகும். முதல் பகுதியில் வழக்கமாக விரிவான பொருளாதார அலசல்களும், பெரியளவிலான பொருளாதார மேம்பாடுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

இரண்டாவது பகுதியில், குறிப்பிட்ட சில பிரச்னைகள் அதாவதுசமூக பாதுகாப்பு, வறுமை, கல்வி, ஆரோக்கியம், காலநிலை போன்றவை குறித்து இடம்
பெறும்.மேலும், இந்த ஆய்வறிக்கையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த பார்வை, பணவீக்க விகிதம், அன்னிய செலாவணி கையிருப்பு, வர்த்தகப் பற்றாக்குறை ஆகியவை குறித்தும் இடம்பெறும்.
பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் பார்லிமென்டில் தாக்கல் செய்த பின், www.indiabudget.gov.in/economicsurvey எனும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து
கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (2)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
31-ஜன-202304:31:26 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வெறும் 88 பக்க அறிக்கை. 35,000 வார்த்தைகள் - கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஊழல் சொத்து மதிப்பு, இரண்டே நாளில் $65 பில்லியன். அது பொருளாதார அறிக்கை. நீங்க போடுறது, பொருளாதார ஊழல் கொள்ளைக்கு ஜால்றா அறிக்கை. நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அதன் பாதுகாப்பு நுழைவாயில்கள் பலவீனப்படுத்தப்பட்டு, அதன் அடிப்படை கட்டுமானம் கேள்விக்குறியாகி, பங்குச்சந்தையை நம்பவைத்து வங்கிகளை திவாலாக்கி, முதலீட்டாளர்களை ஏமாற்றி நடுத்தெருவுக்கு கொண்டு வந்து, இதெல்லாம் போதாது என்று நாட்டின் பாதுகாப்பு துறை சார்ந்த ஒப்பந்தகளையும் திருட்டு கும்பலிடம் அள்ளிக்கொடுத்த கும்பலுக்கு ஜால்றா போடும் அறிக்கை.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
31-ஜன-202304:20:36 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்திய (அதானி என்று படிக்கவும்) பொருளாதாரத்தை குலைக்க எட்டு வெளிநாடுகள் அதிபர்கள் பயங்கர சதி. ஜீ கண்டுபிடிப்பு. ஹெக்டேர் நிலம் ஒரு ரூவான்னு அதானிக்கு கொடுத்து, அதே இடத்தில கட்டின குடவுனுக்கு சதுர அடிக்கு 40 ரூபான்னு வாடகை கொடுத்து "பிசினஸ் டீல்" ஆரம்பிச்சி வெச்சார் ஒருத்தர். இன்னிக்கி அந்த மாதிரி பிசினஸ் பிளான் யாருக்கும் கிடைக்காது. அப்படி தில்லுமுல்லுவில் ஆரம்பித்த குழுமம், இன்று மொத்த இந்தியாவின் பங்குச்சந்தையின் நம்பிக்கைத்தன்மையையே காலி ஆக்கி விட்டது. பேராசை பிடித்த இருவரின் கூடாநட்பின் காரணமாக நடக்கக்கூடாதவை எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X