வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை : ஒடிசாவில், 50 ஆயிரம் கோடி கிலோ நிலக்கரி இருப்பு உடைய சகிகோபால் சுரங்கத்தை ஒதுக்கீடு செய்வதற்காக, மத்திய நிலக்கரி அமைச்சகம் நடத்திய ஏலத்தில், தமிழக மின் வாரியம் பங்கேற்றது.
தமிழக மின் வாரியம், திருவள்ளூர், துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், புதிய அனல் மின் நிலையங்களை அமைத்து வருகிறது. அவற்றில் மின் உற்பத்திக்கு எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படும்.
ஒடிசா மாநிலம், ஆங்கூல் மாவட்டத்தில், 50 ஆயிரம் கோடி கிலோ நிலக்கரி இருப்பு உடைய சகிகோபால் சுரங்கம் உள்ளது. இதனுடன் சேர்த்து நாடு முழுதும், 141 சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ய நிலக்கரி அமைச்சகம் ஏலம் கோரியுள்ளது. அதில் பங்கேற்க, நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
மற்ற சுரங்கங்களை விட, தமிழகத்திற்கு அருகில் உள்ள சகிகோபால் சுரங்கத்தை ஏலம் எடுப்பதற்கான போட்டியில், தமிழக மின் வாரியமும் பங்கேற்றுள்ளது. அதேபோல் பல நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
![]()
|
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒடிசாவில் உள்ள தால்சர், ஐ.பி.வேலி சுரங்கங்களில் இருந்து, ஏற்கனவே தமிழகத்திற்கு நிலக்கரி வருகிறது. 'எனவே, தால்சர் அருகில் உள்ள சகிகோபால் சுரங்கத்தை ஏலம் எடுக்கும் முயற்சி நடக்கிறது; இதனால், நிலக்கரி எடுத்து வரும் போக்குவரத்திற்கு அதிக செலவு ஏற்படாது' என்றார்.
Advertisement