வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை: 'தாய் மொழியில் மருத்துவம், சட்டம், தொழில்நுட்ப கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்ற, மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசு செயல்படுத்த முனைவதில் மகிழ்ச்சி அடைகிறோம்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அவரது அறிக்கை:
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, 2022 நவ.,12ல், 'தமிழ் வழியில் மருத்துவ கல்வியை பயிற்று மொழியாக துவக்கினால், தமிழ் வழி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்' என்று, தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
![]()
|
முதல்வர் ஸ்டாலின், காது, மூக்கு, தொண்டை டாக்டர்கள் மாநாட்டில் பேசும்போது, 'மருத்துவ கல்வி புத்தகங்களை தமிழக அரசு ,சமீபத்தில் தமிழில் வெளியிட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
தாய் மொழியில் மருத்துவம், சட்டம், தொழில்நுட்ப கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் அமித் ஷாவின் வேண்டுகோளை ஏற்று, அரசு தீவிரமாக செயல்படுத்த முனைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Advertisement