வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மின் இணைப்பு எண்ணுடன், 'ஆதார்' எண் இணைக்க வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன்(ஜன.,31) முடிவடையும் நிலையில், இன்னும் 33 லட்சம் பேர் இணைக்காமல் உள்ளனர்.
தமிழக மின் வாரியம், இலவச மற்றும் மானிய விலையில் மின்சாரம் வழங்கும் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், அவர்களின், 'ஆதார்' எண்ணை இணைக்கும் பணியை, 2022 நவ., 15ல் துவக்கியது; டிச., 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
பின், இம்மாதம் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று, ஆதார் இணைக்குமாறு கூறி வருகின்றனர்.
ஆதார் இணைக்க வழங்கப்பட்ட அவகாசம், இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை இணைக்காதவர்களுக்கு, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
![]()
|
அவரது செய்திக்குறிப்பு: மின் வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் துவங்கப்பட்ட மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், 29ம் தேதி மாலை வரை, 2.34 கோடி இணைப்புகளில், ஆதார் இணைக்கப்பட்டு உள்ளன.
இது, மொத்தம் உள்ள 2.67 கோடி வீடு, குடிசை வீடு, கைத்தறி, விசைத்தறி, விவசாய இணைப்புகளில், 87.44 சதவீதம். இதுவரை இணைத்திடாதவர்கள், ஆதார் எண்ணை விரைந்து இணைக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.