வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை: சென்னையில் இருந்து கோவை மற்றும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் செல்லும் விமானங்கள், போதிய பயணியர் இல்லாமல் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து கோவைக்கு, நேற்று(ஜன., 30) காலை 10:00 மணிக்கு புறப்பட வேண்டிய 'இண்டிகோ' விமானம், 10:30 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், போதிய பயணியர் இல்லாததால், அந்த சேவை ரத்து செய்யப்பட்டது. அதே போல கோவையில் இருந்து சென்னை வர வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டது.
மேலும், மாலை 4:30 மணிக்கு, சென்னையில் இருந்து, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் செல்லும் விமானமும், அங்கிருந்து சென்னை வரும் விமானமும் போதிய பயணியர் இன்றி ரத்து செய்யப்பட்டன.
Advertisement