Products can be purchased at any ration shop: Starting from tomorrow | எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்: நாளை முதல் துவக்கம்| Dinamalar

எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்: நாளை முதல் துவக்கம்

Updated : ஜன 31, 2023 | Added : ஜன 31, 2023 | கருத்துகள் (4) | |
சென்னை-பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்ததால், நாளை முதல் கார்டுதாரர்கள், அத்தியாவசிய உணவு பொருட்களை, எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம்.ரேஷன் பொருட்களை, கார்டில் உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடையில் மட்டும் வாங்க முடியும். இதனால், இடம்பெயரும் தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். இதனால், கார்டுதாரர்கள் எந்த இடத்திலும் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்களை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்ததால், நாளை முதல் கார்டுதாரர்கள், அத்தியாவசிய உணவு பொருட்களை, எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம்.



latest tamil news



ரேஷன் பொருட்களை, கார்டில் உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடையில் மட்டும் வாங்க முடியும். இதனால், இடம்பெயரும் தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். இதனால், கார்டுதாரர்கள் எந்த இடத்திலும் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கும் வசதி துவக்கப்பட்டது.

பொங்கலை முன்னிட்டு ரேஷன் கடைகளில், 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாய் ரொக்கம், கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன.


latest tamil news



பரிசு தொகுப்பும், இம்மாத பொருட்களும், ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கு ஒதுக்கிய கடையில் மட்டும் வழங்கப் பட்டன.

பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்து விட்டதால், நாளை முதல், அடுத்த மாத உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

அவற்றை கார்டுதாரர்கள்முகவரிக்கு ஒதுக்கிய கடை மட்டுமின்றி, எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X