சென்னை-தமிழகத்தில் புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம், தற்காலிக மின் இணைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு, மின் வாரிய இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அதன்படி, www.tangedco.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, 'அப்ளை ஆன்லைன்' பகுதிக்குள் நுழைந்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கூடுதல் நேரம் எடுப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், தற்போது இணையதளத்தில் மின்சார சேவைக்கு விண்ணப்பிக்கும் பகுதிக்கு விரைந்து செல்வதற்காக, நேரடி 'லிங்க்' எனப்படும் இணைப்பு முகவரியை, மின் வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, புதிய மின் இணைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், nsc.tnebltd.gov.in/nsconline/ என்ற இணையதள முகவரியை தேர்வு செய்தால், விரைந்து நேரடியாக விண்ணப்பிக்கும் பகுதி செல்லலாம்.
Advertisement