ஏராடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், வேட்புமனு தாக்கல் இன்று (ஜன.,31) துவங்கியது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ., திருமகன் மறைவு காரணமாக, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு, பிப்., 27ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் நடக்கும் முதல் இடைத்தேர்தல். அ.தி.மு.க.,வில் பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே பிளவு ஏற்பட்ட பின் நடக்கும் தேர்தல். லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் தேர்தல் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், இன்று துவங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்., 7 கடைசி நாள். பிப்., 8ல் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை வாபஸ் பெற, பிப்.,10 கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். பிப்., 27ல் ஓட்டுப்பதிவும், மார்ச் 2ல் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன் - தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் முதல் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.