மும்பை: ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் இருந்து மும்பைக்கு விஸ்தாரா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று வந்தது.
இந்த விமானத்தில் இத்தாலியை சேர்ந்த பவோலா பெர்ருசியோ என்ற பெண், 'எகானமி கிளாஸ்' வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், அவர் தனது இருக்கையில் அமராமல் 'பிசினஸ் கிளாஸ் ' வகுப்பில் அமர்ந்திருந்தார். இதனை தட்டிக்கேட்ட விமான பணிப்பெண்களுடன் தகராறில் ஈடுபட்டதுடன், ஊழியர் ஒருவரை தாக்கினார்.
தொடர்ந்து ஆடைகளை களைந்து அரை நிர்வாணமாக விமானத்திற்குள் நடந்தார். விமானி எவ்வளவு எச்சரித்தும் பொருட்படுத்தாத அந்த இத்தாலி பெண், ஆபாச வார்த்தைகளால் ஊழியர்களை திட்டினார். இது தொடர்பாக விமான ஊழியர்கள் அளித்த புகாரை தொடர்ந்து அந்த பெண்ணை மும்பை போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.