வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒருமித்த கருத்துக்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை என்றும், எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிப்பதாகவும் கூட்டத்தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.,31) துவங்கியது. கூட்டத்தொடருக்கு முன்னதாக பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் கூறியதாவது: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒருமித்த கருத்துக்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தப்பட வேண்டும். எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு பார்லியில் உரையாற்றுவது மிகப்பெரிய கவுரவம். குறிப்பாக நமது அரசியலமைப்பு சட்டத்துக்கும், பெண்களுக்கான மரியாதைக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். நமது ஜனாதிபதியை எண்ணி எம்.பி.,க்கள் பெருமை அடைய வேண்டும். நமது நிதியமைச்சரும் ஒரு பெண்தான். அவர் நாளை பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டை இந்தியா மட்டுமல்லாமல், உலக நாடுகள் அனைத்தும் இன்று இந்தியாவை உற்று நோக்குகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.