வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.,31) ஜனாதிபதி உரையுடன் துவங்கியது.
இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
* நவீனத்துவம் மூலம் மக்களை அணுகுவதால் இந்த திட்டங்கள் அனைவரையும் சென்றடைகின்றன.
* வளர்ச்சி அடையாத பகுதிகள் மீது தனி கவனம் செலுத்தப்படுகிறது.
* ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பெரும்பாலான ஏழை மக்கள் பயன்பெறுகிறார்கள்.
* பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட சமூகத்தின் ஆசைகளை நிறைவேற்றுகிறது இந்த அரசு.
* விவசாயிகள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.
* மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
* நாட்டில் 100க்கும் மேற்பட்ட வளர்ச்சி அடையாத மாவட்டங்கள் இருந்தன. அந்த மாவட்டங்கள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.
* எல்லை பகுதிகளில் நிலவிய நக்சல் இயக்கங்களில் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
* அரசின் மக்கள் நலன் திட்டங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைந்துள்ளது.
* பயமற்ற ஆக்கப்பூர்வமான அரசு மத்தியில் உள்ளது.

* இந்திய இளைஞர்கள் எப்போதும் 2 அடி முன்னே உள்ளனர்.
* ஊழல் இல்லாத நாடாக இந்தியா மாறும்.
* நேர்மையுடனும், வெளிப்படையாகவும் இந்த அரசு செயல்படுகிறது.
* தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை பல வகைகளில் உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ளன.
* அரசியல் நிலைத்தன்மையில் மற்ற நாடுகளைவிட இந்தியா முன்னிலையில் உள்ளது.
* ஏழைகளின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதே இந்த அரசின் இலக்கு.
* ஓபிசி, எஸ்சி, எஸ்டி., வகுப்பினரின் கனவுகளை நனவாக்க அரசு முயற்சிக்கிறது.
* இந்த அரசு தற்சார்பு நாடாக இந்தியாவை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது.
* ஜம்மு-காஷ்மீரில் மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிய பயங்கரவாத பிரச்னைக்கு முடிவு காணப்பட்டுள்ளது.
* ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சுற்றுலா மேம்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் ஒழிப்பு
* பயங்கரவாதத்தை ஒழிப்பதில் மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளது.
* நாட்டு மக்கள் அனைவருக்கும் எந்த பாகுபாடுமின்றி மத்திய அரசு பணியாற்றி வருகிறது.
* நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் பெயர்கள் 21 அந்தமான் தீவுகளுக்கு சூட்டப்பட்டன.
* உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன
* நாட்டில் இருந்த காலனிகால அடிமைத்தன அடையாளங்கள் மத்திய அரசால் அகற்றப்பட்டுவிட்டன.
* எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களை மேம்படுத்த வைப்ரன்ட் கிராமங்கள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
* சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.2.25 லட்சம் கோடி நிதியுதவி செய்துள்ளது.
* விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
* நாட்டின் ஒவ்வொரு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
* விளையாட்டு துறையில் திறமையானவர்களை ஊக்குவிக்க கேலோ இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டது.

வளர்ச்சி, முன்னேற்றம், புரட்சி
* அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
* ராணுவ தளவாட தயாரிப்பில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது.
* உள்நாட்டிலேயே போர் விமானங்களை கட்டமைக்கும் அளவுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
* புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது இந்த அரசு.
* கிராம மக்களுக்கு வேலை, மருத்துவ வசதி கிடைத்திருப்பதாக உலக வங்கி அமைப்பு தெரிவித்துள்ளது.
* அதி வேகமான வளர்ச்சி அடைந்து வரும் நாட்டின் விமானப்படை.
* பிராட்பேண்ட் சேவைத்துறையில் இந்தியா புதிய புரட்சி செய்துள்ளது.
* நாட்டின் மிகப்பெரிய ரயில்நிலையங்கள் நவீனத்துவம் பெறுகின்றன.
* நாட்டுக்கு இளைஞர்கள் சேவையாற்றும் வாய்ப்பை அளிக்க பாதுகாப்பு படையில் அக்னிவீர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
* நாட்டில் ஜனநாயகம், சமூகநீதிக்கு ஊழல் மிகப்பெரிய எதிரியாக உள்ளது.
* ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
* வெளிநாடு தப்பிச் சென்ற நிதி மோசடியாளர்களை நாட்டுக்கு திரும்ப கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* 2070க்குள் மாசில்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* லட்சியத்தை அடைய நாம் ஒன்றோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.