சென்னை: மழைக் காலத்தில் தூய்மைப் பணியாளர்களின் பணி அளப்பரியது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மழைக் காலத்தில் தூய்மைப் பணியாளர்களின் பணி அளப்பரியது. மழை வெள்ள பாதிப்புகளை சிறப்பாக கையாள அனைவரின் ஒருங்கிணைப்பே கராணம். மழைக்காலத்தில் மக்களோடு, மக்களாக நின்று மாநகராட்சி ஊழியர்கள் அனைவரும் பணி மேற்கொண்டனர்.
மழைநீர் தேங்காத பருவமழைக் காலத்தை, வருங்காலத்தில் மக்கள் பார்ப்பார்கள். மழைநீர் பாதிப்பு இல்லாமல் இருக்க தமிழக அரசு இன்னும் பல நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
துாத்துக்குடி அனல் மின் நிலையம்:
எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால், தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக தூத்துக்குடி துறைமுகம் தளம்-1ல் புதிதாக ரூ. 325 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட இரண்டு நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.